"பூக்கி" படத்தின் டிரெய்லர் வெளியானது

விஜய் ஆண்டனியின் “பூக்கி” படம் வருகிற 13-ம் தேதி வெளியாகிறது.
"பூக்கி" படத்தின் டிரெய்லர் வெளியானது
Published on

சென்னை,

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். தற்போது இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களில் கலக்கி வரும் விஜய் ஆண்டனி தற்போது ‛பூக்கி’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

2கே தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சினைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், 'பூக்கி' படம் உருவாகி உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் புரோமோ வீடியோ, பாடல்கள் வெளியாகி வைரலாகின.

இந்த நிலையில், தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லரை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com