மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா கூட்டணி

விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா இணையும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா கூட்டணி
Published on

தமிழ் திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் தியாகராஜன் குமாரராஜா. ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் மற்றும் மாடர்ன் லவ் சென்னை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. இப்படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினையும் வென்றார் விஜய் சேதுபதி.

தியாகராஜன் குமாரராஜா இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். ‘சூப்பர் டீலர்க்ஸ்’ திரைப்படத்திற்கு பிறகு இருவரும் புதிய படத்தில் இணைகின்றனர். இருவரும் இணையும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com