

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக‘டிராகன்’ படத்தில் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமானார். அந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நாயகியாக மாறிப்போன கயாடு லோஹர். தற்போது நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக ‘இதயம் முரளி’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஜீ.வி. பிரகாசுடன் ‘இம்மார்டல்’ என்ற படத்திலும், சிம்பு நடிக்கும் ‘எஸ்.டி.ஆர் 49’ என்ற படத்திலும் கயாடு லோஹர் இணைந்துள்ளார். அடுத்ததாக ‘லப்பர் பந்து’ இயக்குனர் தமிழரசன் இயக்கும் படத்தில் தனுசுடன் கயாடு லோஹர் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம், “உங்களிடம் மாற்றிக்கொள்ள நினைக்கும் விஷயம் எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "நான் மிகவும் உணர்ச்சிவசப்படும் ஆள்.அதுதான் என் பிரச்சினையாகவே நினைக்கிறேன். அதனால் எளிதில் மனம் உடைகிறேன். எனவே அந்த போக்கை மாற்றிக்கொண்டு இன்னும் உறுதி மிக்கவளாய், எந்த சூழலிலும் தடுமாற்றம் இல்லாதவளாய் மாற ஆசைப்படுகிறேன்” என்று அவர் பதிலளித்தார்.