

டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்தாண்டு ஐடெண்டிட்டி, நரிவேட்டை மற்றும் லோகா திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘லோகா 2’ படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பள்ளிச்சட்டம்பி’. இப்படத்தில், நடிகை கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார். மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் விஜயராகவன், சுதீர் கரமானா, பாபுராஜ், வினோத் கெடமங்களம், பிரசாந்த் அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
1950 காலத்தில் நடைபெறும் கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்தது. இத்திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டொவினோ தாமஸ் , கயாது லோஹர் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகிறது