’அங்கு படமாக்கப்படும் முதல் இந்திய திரைப்படம்’...சாதனை படைத்த 'வாரணாசி'

இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 7-ம் தேதி வெளியாக உள்ளது.
’அங்கு படமாக்கப்படும் முதல் இந்திய திரைப்படம்’...சாதனை படைத்த 'வாரணாசி'
Published on

சென்னை,

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் வாரணாசி திரைப்படம் உலக அளவில் வெளியாகவுள்ளது. சுமார் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது அடுத்தாண்டு ஏப்ரல் 7-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் இந்தியாவுடன் சேர்ந்து, கென்யா, தென்னாப்பிரிக்கா, தான்சானியா, ஜார்ஜியா போன்ற பல நாடுகளில் படமாக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் படம் அண்டார்டிகாவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது உண்மையாகும் பட்சத்தில் அண்டார்டிகாவில் படமாக்கப்படும் முதல் இந்தியப் படம் என்ற புதிய சாதனையை வாரணாசி படைக்கும்.

Also Read
2 பாகங்களாக உருவாகிறதா ’வாரணாசி’ ? - எஸ்.எஸ்.ராஜமவுலி பதில்
’அங்கு படமாக்கப்படும் முதல் இந்திய திரைப்படம்’...சாதனை படைத்த 'வாரணாசி'

இந்த மாத இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ படக்குழு அண்டார்டிகா சென்று அங்கு சில காட்சிகளை படமாக்கும் என்று கூறப்படுகிறது. ராஜமவுலி அங்கு என்ன மாதிரியான காட்சிகளைக் காட்டப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com