விஜய் சேதுபதியின் “பாக்கெட் நாவல்” படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிக்கும் ‘பாக்கெட் நாவல்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
விஜய் சேதுபதியின் “பாக்கெட் நாவல்” படத்தின் படப்பிடிப்பு துவக்கம்
Published on

தமிழ் திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் தியாகராஜன் குமாரராஜா. ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் மற்றும் மாடர்ன் லவ் சென்னை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. இப்படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினையும் வென்றார் விஜய் சேதுபதி.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்துக்கு ‘பாக்கெட் நாவல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘சூப்பர் டீலர்க்ஸ்’ திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். ஏற்கெனவே, மாடர்ன் லவ் என்ற இணையத் தொடரில் இளையராஜா இவருடன் பணியாற்றி இருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான டைலர் டர்டன் மற்றும் கினோ பிஸ்ட்மூலம் ‘பாக்கெட் நாவல்’ படத்தை தயாரிக்கிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் சத்யராஜ் நடராஜன் இப்படத்திலும் இணைந்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி, கிஷோர், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ‘பாக்கெட் நாவல்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதன் புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. போஸ்டர் வெளியீட்டில் கதை, திரைக்கதை ஆண்ட்ரூ லூயிஸ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்ட்ரூ தமிழில் லீலை, கொலைக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களையும் வதந்தி என்கிற இணையத் தொடரையும் இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தை இந்தாண்டு இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com