’தி ராஜா சாப்’ படத்தின் முதல் பாடல் எப்போது? - வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு


When is the first song of the movie The Raja Saab? - Official announcement released
x
தினத்தந்தி 21 Nov 2025 12:29 PM IST (Updated: 21 Nov 2025 12:37 PM IST)
t-max-icont-min-icon

இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

சென்னை,

பான் இந்தியா நட்சத்திரம் பிரபாஸ் நடிப்பில் அடுத்து திரைக்கு வர இருக்கும் படம் தி ராஜா சாப். மாருதி இயக்கிய இந்த திகில் நகைச்சுவை படம் ஜனவரி 10-ம் தேதி தமிழில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் முதல் பாடல் அக்டோபர் மாதம் பிரபாஸின் பிறந்தநாளில் வெளியாக இருந்தது, ஆனால் அது நடக்கவில்லை. பின்னர், தயாரிப்பாளர் பாடல் நவம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று கூறினார். ஆனால் அதுவும் ஒத்திவைக்கப்பட்டது, இது ரசிகர்களை சற்று ஏமாற்றமடையச் செய்தது.

இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அப்பாடல் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி, இப்பாடல் வருகிற 23-ம் தேதி வெளியாகிறது. இது பிரபாஸின் ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது.

பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாகவும், சஞ்சய் தத் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.


1 More update

Next Story