டியூட் பட விழா....மமிதா பைஜு எங்கே? - இதயத்தை காட்டிய பிரதீப் ; வைரலாகும் வீடியோ

டியூட் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
Where is Mamita Baiju? - Pradeep shows his heart; Video goes viral
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல் ஐ கே படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 18-ம் தேதி வெளியாக் உள்ளது.

இது மட்டுமில்லாமல் டியூட் படத்திலும் பிரதீப் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா நடித்துள்ளார். இப்படம் வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. மமிதாவை தவிர படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

அப்போது ரசிகர்கள் மமிதா எங்கே ? என கேட்டனர். அதற்கு பிரதீப் தனது இதயத்தை காட்டி இங்கே இருக்கிறார் என்றார். பின்னர் மமிதா தற்போது சூர்யா சார் படத்தின் படப்பிடிப்பில் இருப்பதாகவும் நாளைக்குள் புரமோஷனின் கலந்துகொள்வார் எனவும் கூறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com