யார் அந்த ஹைசன்பெர்க்? - லோகேஷ், நெல்சன் சொன்ன பதில்

ஹைசன்பெர்க் யார் என்ற கேள்விக்கு லோகேஷ் மற்றும் நெல்சன் கொடுத்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை,
தமிழ் சினிமாவில் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் பெயர் ஹைசன்பெர்க். பாடலாசியராக அறியப்படும் இவர் யார் என்று இன்னும் தெரியாதநிலையில், அவரது பாடல்கள் மட்டும் சூப்பர்ஹிட் ஆகி வருகின்றன.
விஜய்யின் 'லியோ, ஜூனியர் என்டிஆரின் 'தேவரா', ரஜினிகாந்தின் 'வேட்டையன்' உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார் இந்த ஹைசன்பெர்க்.
சமீபத்தில் லோகேஷ் நடிகராக அறிமுகமான ’டிசி’ படத்திலும், ஷாருக்கானின் ’கிங்’ படத்திலும் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்.
இந்நிலையில், ஹைசன்பெர்க் யார் என்ற கேள்விக்கு லோகேஷ் மற்றும் நெல்சன் கொடுத்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கூறுகையில், நான் முதலில் அவரை சந்தித்தேன். பின்னர் அனிருத்தை சந்திக்க வைத்தேன். அப்படி ஒருவர் இருக்கிறார். ஆனால் அது அவரிடைய உண்மையான பெயர் இல்லை’ என்றார்.
நெல்சன் கூறுகையில்,
’எல்லோரும் நான்தான் அந்த ஹைசன்பெர்க் என்று நினைக்கிறார்கள். ஆனால் நான் இல்லை. அது லோகேஷ் கனகராஜாக இருக்கலாம்’ என்றார்.






