“கிங்” பட்டம் எனக்கு அதிகாரம் அல்ல, பொறுப்பு - ஷாருக்கான்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனக்கு வழங்கப்பட்டுள்ள ‘கிங்’ பட்டம் அதிகாரத்தை கொடுப்பதாக நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
“கிங்” பட்டம் எனக்கு அதிகாரம் அல்ல, பொறுப்பு - ஷாருக்கான்
Published on

இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் தற்போது ‘வார்’ மற்றும் ‘பதான்’ படங்களை இயக்கி புகழ் பெற்ற, சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ‘கிங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவரது மகள் சுஹானா கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கிங்’ படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.ஷாருக்கானின் ‘கிங்’ படம் டிசம்பர் 24ம் தேதி வெளியாகிறது.

ஷாருக்கான இந்திய சினிமாவில் மூன்று தசாப்தங்களுக்கு மேல் நடித்துவருகிறார். பல பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி, சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் வென்றுள்ளார். பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கான் ‘கிங்’ கான் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். தொலைக்காட்சித் தொடர் மூலம் அறிமுகமான ஷாருக்கான் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக 'பாலிவுட் கிங்' மற்றும் 'பாட்ஷா' போன்ற மகுடத்துடன் பாலிவுட்டில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறார். சினிமா மட்டுமல்லாது கிரிக்கெட் தொழிலும் ஈடுபட்டுள்ளார்.

ஷாருக்கானுக்கு வழங்கப்படும் கிங் பட்டம் குறித்து குறித்து அவரிடம் ஒரு முறை நிருபர்கள் கேட்டதற்கு, “எனக்கு 'கிங்' என்ற சொல் ஒருபோதும் அதிகாரத்தைக் குறித்தது கிடையாது. அது எப்போதும் ஒரு பொறுப்பு சார்ந்த விஷயம். என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்கும், நான் சொல்லத் தேர்ந்தெடுக்கும் கதைகளுக்கும் நான் உண்மையாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பை அது உணர்த்துகிறது” என்று தெரிவித்தார்

பாலிவுட் இயக்குநர் அனுபவ் சின்ஹா “பாலிவுட்டில் ஒரு பெரிய மாற்றத்தை ஷாருக்கான் ஒற்றை ஆளாக நிகழ்த்தினார். ஷாருக்கான் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு, கதாநாயகிகள் படியில் ஏறும்போது கைகொடுத்து உதவுவது போன்ற கண்ணியமான செயல்களை எந்த ஒரு நாயகனும் செய்ததை தான் பார்த்ததில்லை. 2013-ஆம் ஆண்டிலிருந்து தனது படங்களின் டைட்டில் கார்டில், தனது பெயருக்கு முன்பாகவே கதாநாயகிகளின் பெயரை இடம்பெறச் செய்யும் வழக்கத்தை ஷாருக்கான் கொண்டு வந்தார். இது திரைத்துறையில் நிலவும் போக்கை மாற்றியது” என்று குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com