திருமணம் செய்துக் கொண்டது தொடர்பான செய்தியை விராட் கோலி - அனுஷ்கா சர்மா வெளியிட்டனர்

திருமணம் செய்துக் கொண்டது தொடர்பான செய்தியை விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா வெளியிட்டு உள்ளனர்.
திருமணம் செய்துக் கொண்டது தொடர்பான செய்தியை விராட் கோலி - அனுஷ்கா சர்மா வெளியிட்டனர்
Published on

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் குறித்தான செய்திகள் வெளியாவதும், அதனை அவர்கள் மறுப்பதும் தொடர்கதையாக இருந்தது. சமீபத்திலும் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா திருமணம் இத்தாலியில் நடக்கிறது என செய்திகள் வெளியாகியது. ஆனால் அதனை அனுஷ்கா சர்மாவின் செய்தி தொடர்பாளர் மறுத்துவிட்டார். அவரது தரப்பில் மறுத்துவிட்டாலும் பிற தகவல்கள் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இடையிலான திருமணம் நடப்பது உண்மைதான் என்பதை தெரிவிக்கும் வகையில் தகவல்கள் வெளியாகியது.

இத்தாலியில் திருமணம் செய்துக்கொள்ள விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் ஐரோப்பாவிற்கு சென்றுவிட்டார்கள் என செய்தி வெளியாகியது. இன்று காலையில் இருவருக்கும் திருமணம் நடந்தது என செய்திகள் வெளியாகியது. இப்போது வெளியாகிய செய்திகள் அனைத்தும் உண்மையாகி உள்ளது. இருவரும் இத்தாலியில் திருமணம் செய்துக் கொண்டனர்.

இப்போது இருவரும் திருமணம் செய்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்து உள்ளனர்.

நாங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் அன்புடன் பிணைக்கப்படுவதாக இன்று வாக்குறுதி அளித்திருக்கிறோம். உங்களுடன் இந்த செய்தியை பகிர்ந்து கொள்வதற்கு உண்மையில் நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இந்த அழகான நாள் எங்களுடைய ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் அன்பு மற்றும் ஆதரவோடு மேலும் சிறப்பாகட்டும். எங்கள் பயணத்தின் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கும் உங்களுக்கு நன்றி, என விராட் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் தங்களுடைய டுவிட்டரில் அழகிய புகைப்படத்துடன் செய்தியை வெளியிட்டு உள்ளனர். புது தம்பதியினருக்கு சினிமா, விளையாட்டுத் துறை நட்சத்திரங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com