ஓடிடியில் இருந்து நீக்கப்பட்ட ''குட் பேட் அக்லி''...ரசிகர்கள் அதிர்ச்சி


ஓடிடியில் இருந்து  நீக்கப்பட்ட குட் பேட் அக்லி...ரசிகர்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 17 Sept 2025 11:59 AM IST (Updated: 17 Sept 2025 12:21 PM IST)
t-max-icont-min-icon

‘குட் பேட் அக்லி’ படத்தில் தனது அனுமதியில்லாமல் பாடல்களை பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.

சென்னை,

அஜித்தின் குட் பேட் அக்லி படம் நெட்பிளிக்ஸ் தளத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியட்நீக்கப்பட்டுளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ரிலீசாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த குட் பேட் அக்லி படத்துக்கு எதிராக இசைஞானி இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

‘குட் பேட் அக்லி’ படத்தில் அனுமதியில்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால், உத்தரவை மீறி, பாடல்களைப் படத்தில் தொடர்ந்து பயன்படுத்துவதாக, தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா தரப்பிலிருந்து புதிய நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது. இந்த தொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில் ஓடிடியில் இருந்து 'குட் பேட் அக்லி' படம் நீக்கப்பட்டு இருக்கிறது. இது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

''குட் பேட் அக்லி'' படத்தில் இளையராஜாவின் 'ஒத்த ரூபா தாரேன்', 'என் ஜோடி மஞ்ச குருவி' மற்றும் 'இளமை இதோ இதோ' போன்ற பாடல்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story