கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்

கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்
கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்
Published on

கே.கே.நகர், மார்ச்.13-
திருச்சி நாயுடுபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் இவரது மகள் ஷெரின்குதா (வயது 19). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது தோழியின் திருமண விழாவிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர். இதேபோல் திருச்சி சங்கிலியாண்டபுரம் ஜீவா தெருவைச் சேர்ந்தவர் அப்துல் காசிம் (74). இவர் சம்பவத்தன்று சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான முதியவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com