சிறுவாச்சூரில் ஸ்ரீசண்டி மஹா யாகம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

சண்டி யாகத்தைத் தொடர்ந்து புனித தீர்த்தங்களைக் கொண்டு அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
சிறுவாச்சூரில் ஸ்ரீசண்டி மஹா யாகம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு
Published on

பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் ஆதிசங்கரர் வழிபட்ட பெருமைபெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு தை மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதன் ஒரு பகுதியாக அம்மனுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

மேலும், உலக நன்மைக்காகவும், பருவமழை தவறாமல் பெய்து தன தானியம் பெருகவும், எதிர்மறையான சிந்தனைகள் அகன்று ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் மேம்படவும் வேண்டி கோவிலின் மகா அபிஷேக கமிட்டி சார்பில் மகா சண்டி ஹோமம் நடைபெற்றது.

Also Read
நினைத்ததை நிறைவேற்றும் மிளகாய் யாகம்
சிறுவாச்சூரில் ஸ்ரீசண்டி மஹா யாகம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

அதனைத் தொடர்ந்து குடங்களில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்ட புனித தீர்த்தங்களைக் கொண்டு அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

மகா சண்டி ஹோமம் மற்றும் மதியம் நடந்த உச்சிகால பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பலர் மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com