விடுமுறை தினம்: திருவண்ணாமலை கோவிலில் நீண்ட வரிசையில் கத்திருந்து பக்தர்கள் தரிசனம்

விடுமுறை தினமான இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
விடுமுறை தினம்: திருவண்ணாமலை கோவிலில் நீண்ட வரிசையில் கத்திருந்து பக்தர்கள் தரிசனம்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதுமட்டுமின்றி விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில் தற்போது ஞாயிறு விடுமுறை தினமான இன்று அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. பக்தர்கள் பொது மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பக்தர்களின் வரிசையானது அம்மணி அம்மன் கோபுரம் அருகில் வடஒத்தவாடை தெரு வரையில் நீண்டு காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com