சோழவந்தான் அருகே காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்


சோழவந்தான் அருகே காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்
x

கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

மதுரை

சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் உள்ள விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா 5 நாட்கள் நடந்தது. யாகசாலை பூஜைகளைத் தொடர்ந்து இன்று காலை கடம் புறப்பாடு நடைபெற்றது. புனித நீர் குடங்களை சுமந்து கோவிலை வலம் வந்தனர்.பின்னர் விமான கலசத்திற்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

இதைத் தொடர்ந்து காசி விஸ்வநாதர், விசாலாட்சி உட்பட பரிகார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு திருமுறை, திருமுறை பாராயணம் நடைபெற்று மேளம் நாதஸ்வர கச்சேரியும் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் வணிகவரித்துறை மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story