மேலக்காட்டுவிளை ஐந்து வீட்டு சுவாமிகள் கோவில் கொடை விழா நாளை தொடங்குகிறது

இரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமிகளுக்கு தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறும்.
ஐந்து வீட்டு சுவாமிகள்
ஐந்து வீட்டு சுவாமிகள்
Published on

மேலக்காட்டுவிளை ஐந்து வீட்டு சுவாமிகள் திருக்கோவில் கொடை விழா நாளை தொடங்கி 2 நாட்கள் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிகள்

நாளை 20-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.30 மணிக்கு பக்திகானம், 5 மணிக்கு புனித நீர் எடுத்து வருதல், 6 மணிக்கு கணபதி ஹோமம், 9 மணிக்கு சுவாமிகளுக்கு அபிஷேகம், 10:30 மணிக்கு சுவாமிகளுக்கு தீபாராதனை, பகல் 11 மணிக்கு பிரசாதம் வழங்குதல், 12 மணிக்கு சுவாமிகளுக்கு தீபாராதனை, மாலை 5 மணிக்கு பக்திகானம், இரவு 9 மணிக்கு பெரியசுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறும்.

நாளை காலை 10.30 மணிக்கு வயனவப்பெருமாள் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை, 11. 30 மணிக்கு அனந்தம்மாள் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை, 12 மணிக்கு ஆத்திசுவாமிக்கு அலங்கார தீபாராதனை, 2 மணிக்கு திருப்புளி ஆழ்வார் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை, அதிகாலை 3 மணிக்கு பெரியபிராட்டி அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடைபெறும்.

நாளை மறுநாள் 21-ம் தேதி சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை, 7 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு (அனைத்து சுவாமிகளுக்கும்) அலங்கார தீபாராதனை, 7.30 மணிக்கு மகா அன்னதானம் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com