பரமத்தி வேலூர்: படமுடிபாளையம் கொங்கலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக விழாவில் பரமத்திவேலூர் மற்றும் படமுடிபாளையம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
பரமத்தி வேலூர்: படமுடிபாளையம் கொங்கலம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Published on

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா படமுடிபாளையத்தில் உள்ள கொங்கலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் (6-ஆம் தேதி) காலை விநாயகர் வழிபாடு, நவநாயகர் யாகம், மகாலட்சுமி யாகம், தீபாராதனையும், காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீர் எடுத்து வருதலும், மாலை முதல் கால் யாக பூஜை, பூர்ணாஹுதியும் நடைபெற்றது.

நேற்று (7-ஆம் தேதி) காலை புதிய விக்ரகங்களுக்கு கண் திறப்பும், மாலை கோபுர கலசம் வைத்தல் மற்றும் மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Also Read
பரமத்தி வேலூர்: முருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு
பரமத்தி வேலூர்: படமுடிபாளையம் கொங்கலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

இன்று காலை 8.45 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாட்டைத் தொடர்ந்து 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் கொங்கலம்மன் கோவில் கும்பாபிஷேகமும், 10 மணிக்குள் விநாயகர், மாரியம்மன், கோவில் கும்பாபிஷேகமும், 10.30 மணிக்கு மூல மூர்த்திகள் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

இதில் பரமத்திவேலூர் மற்றும் படமுடிபாளையம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கொங்கலம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com