மாசி மாத பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 17-ந்தேதி வரை 5 நாட்கள் மாத பூஜை, சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

மாசி மாத பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
Published on

திருவனந்தபுரம்,

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 17-ந்தேதி வரை 5 நாட்கள் மாத பூஜை, சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கேரளாவில் நேற்று முழு அடைப்பு போராட்டத்தையொட்டி அரசு பஸ்கள் இயக்கப்படாததால் சபரிமலையில் பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.

மேலும் கேரள ஐகோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து சபரிமலையில் வழக்க மான நடை திறப்பு புகைப்படம், வீடியோ எடுக்க பத்திரிகையாளர்களுக்கு நேற்று அனுமதி மறுக்கப்பட்டகடகுறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com