சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா: வாகன சேவைகள் விவரம்

வாகன சேவைகள் தினமும் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை யிலும், இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் நடக்கின்றன.
சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா: வாகன சேவைகள் விவரம்
Published on

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்க டேஸ்வரர் கோவிலில் நாளை மறுநாள் (8-2-2026) வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. வருகிற 16-ந்தேதி வரை 9 நாட்கள் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்கிறது. முதல் நாளான 8-ந்தேதி காலை 8.15 மணியில் இருந்து 8.35 மணிவரை கும்ப லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் வாகன சேவை நடைபெறுகிறது.

கருட சேவை

முதல் நாளில் இரவு பெரிய சேஷ வாகன வீதி உலா நடக்கிறது. 9-ந்தேதி காலை சிறிய சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 10-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 11-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா, 12-ந்தேதி காலை பல்லக்கு உற்சவம் (மோகினி அவதாரம்), இரவு கருட வாகன வீதிஉலா நடைபெறுகிறது.

Also Read
பிரம்மோற்சவ விழா.. சீனிவாசமங்காபுரத்தில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்
சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா: வாகன சேவைகள் விவரம்

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

13-ந்தேதி காலை ஹனுமந்த வாகன வீதிஉலா, மதியம் 2 மணியில் இருந்து மாலை 3 மணிவரை வசந்தோற்சவம், மாலை 4 மணியில் இருந்து 5 மணிவரை தங்கத்தேரோட்டம், இரவு கஜ வாகன வீதிஉலா, 14-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா. 15-ந்தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா நடைபெறுகிறது.

16-ந்தேதி காலை 9.55 மணியில் இருந்து 10.15 மணிவரை சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி, மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிக்குள் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. இதோடு வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

Also Read
திருப்பதி: தங்க கருட வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா: வாகன சேவைகள் விவரம்

வாகன சேவைகள் தினமும் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் நடக்கின்றன.

பிரம்மோற்சவ விழாவையொட்டி இந்து தர்ம பிரசார பரிஷத் சார்பில் வாகன சேவைகளின்போது தினமும் கோலாட்ட நடனங்கள் மற்றும் பஜனை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் . அன்னமாச்சாரியா திட்டக் கலைஞர்கள் அன்னமாச்சாரியார் சங்கீர்த்தனங்களை வழங்குவார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com