வாடிப்பட்டி: குலசேகரன்கோட்டையில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர்
சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர்
Published on

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டையில் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. குலசேகர பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவிலில் தெற்கு முகமாக வீற்றிருக்கும் கால பைரவருக்கு, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 21 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அர்ச்சனைகள் செய்து உளுந்தவடை மாலை, எலுமிச்சை, வெற்றிலை மற்றும் செவ்வரளி வண்ண மலர்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்கார செய்யப்பட்டது.

மாலை 5மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Also Read
பைரவரை வணங்க உகந்த அஷ்டமி
சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர்

இதேபோல், குட்லாடம்பட்டி கொட்டமடைக்கி கண்மாய் கரையில் கீழ்பகுதியில் 36 அடி உயர லிங்க வடிவிலான தியான மண்டப அண்ணாமலையார் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com