நான் 2 விஷயங்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன்- பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி


நான் 2 விஷயங்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன்- பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி
x

. இந்திய கிரிக்கெட் வாரிய புதிய தலைவராக ரோஜர் பின்னி இன்று அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) 91-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடந்தது . இந்திய கிரிக்கெட் வாரிய புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் வீரரும், கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகியுமான 67 வயது ரோஜர் பின்னி இன்று அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் . பி.சி.சி.ஐ. பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாள்களர்களை சந்தித்த ரோஜர் பின்னி கூறியதாவது ;

பிசிசிஐ தலைவராக நான் முதலில் 2 விஷயங்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன். முதலில், வீரர்களுக்கு ஏற்படும் காயங்களைத் தடுப்பது. உலகக் கோப்பைக்கு சற்று முன்பு ஜஸ்பிரித் பும்ரா காயமடைந்தார், இது முழு திட்டத்தையும் பாதிக்கிறது. மேலும் இரண்டாவதாக, நாட்டில் உள்ள ஆடுகளங்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன் என அவர் தெரிவித்தார்.


Next Story