

நுழைவுத்தேர்வுகள் தேவையா? என்ற கேள்வி இன்று பலருடைய மனதிலும் எழுந்திருக்கிறது.
"எல்லோரும் ஒரே படிப்பை தானே படித்து வந்திருக்கிறோம் பிறகு ஏன் மேற்படிப்புக்கும் நுழைவு தேர்வு நடத்துகிறார்கள்?. வேலைவாய்ப்புக்கும் நுழைவுத் தேர்வு அவசியமாகிறது. இந்த நுழைவு தேர்வுகள் ஏன் நடத்தப்படுகின்றன?"-என்னும் எதிர்ப்பு குரல்கள் ஏராளமாக நாள் தோறும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
இந்தச் சூழலில் நுழைவுத் தேர்வுகளில் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
பொதுவாக, நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுவதன் அடிப்படை நோக்கமே திறமையின் அடிப்படையில் (MERIT BASIS ) தகுதியானவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்குவது தான். அதிலும் குறிப்பாக மேற்படிப்புக்காக நுழைவுத்தேர்வு நடத்தும்போது, படிப்பில் சிறந்து விளங்குபவர்களுக்கு மட்டுமே மேற்படிப்பிற்கான வாய்ப்புகள் கிடைக்கிறது.
இதன் மூலம், வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல், தகுதி மட்டுமே கருத்தில் கொண்டு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.
படிப்பில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து மேற்படிப்புக்கான வாய்ப்புகளை வழங்கும்போது, அவர்களது திறமை மேலும் அதிகமாக வளர்க்கப்படுகிறது. இதன் மூலம் தரமான கல்வி வழங்கவும் வாய்ப்புகள் ஏராளம் உள்ளது.
பொதுவாக, நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுவதன் அடிப்படை நோக்கமே திறமையின் அடிப்படையில் (MERIT BASIS ) தகுதியானவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்குவது தான். அதிலும் குறிப்பாக மேற்படிப்புக்காக நுழைவுத்தேர்வு நடத்தும்போது, படிப்பில் சிறந்து விளங்குபவர்களுக்கு மட்டுமே மேற்படிப்பிற்கான வாய்ப்புகள் கிடைக்கிறது.
இதன் மூலம், வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல், தகுதி மட்டுமே கருத்தில் கொண்டு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது..
படிப்பில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து மேற்படிப்புக்கான வாய்ப்புகளை வழங்கும்போது, அவர்களது திறமை மேலும் அதிகமாக வளர்க்கப்படுகிறது. இதன் மூலம் தரமான கல்வி வழங்கவும் வாய்ப்புகள் ஏராளம் உள்ளது.
பொதுவாக, நுழைவுத்தேர்வில், எல்லோருக்கும் ஒரே விதமான கேள்வித்தாள்கள் வழங்கப்படும். இதைப்போலவே தேர்வுத்தாளை மதிப்பீடு செய்யும் போதும் பாகுபாடு இன்றி நேர்மையான முறையில் மதிப்பீடு செய்ய வாய்ப்புகள் அதிகம்.
மேல்நிலைப் பள்ளிகளில் பாடங்களில் பெற்ற மதிப்பெண்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல், நுழைவுத்தேர்வின் மூலம் ஒரு போட்டியாளரின் முடிவெடுக்கும் திறன், பகுப்பாய்வு செய்யும் திறன், நேர நிர்வாகம் போன்ற சில முக்கிய திறன்களையும் நுழைவுத்தேர்வு மூலம் மதிப்பீடு செய்ய வாய்ப்புள்ளது.
இந்தியா முழுவதும் ஏராளமான பள்ளிகள் உள்ளன. குறிப்பாக, அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளி ,சி.பி.எஸ்.சி பள்ளி, மத்திய அரசின் பாடத்திட்டத்தை கடைபிடிக்கும் பள்ளி- என விதவிதமான முறையில் கல்வி கற்பிக்கும் கல்வி நிலையங்கள் உள்ளன.
இதனால் ,மேல்நிலைப்பள்ளியில் ஒருவர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மேற்படிப்பை தொடர வாய்ப்புகள் வழங்கும்போது சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. மேலும், ஏராளமான பள்ளிகள் இந்தியாவில் உள்ளன. ஆனால், குறைந்த அளவிலேயே மேற்படிப்பை வழங்கும் கல்வி நிலையங்களும் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் உள்ளன. இதனால், மேல்நிலைப் பள்ளியில் படித்த அத்தனை பேருக்கும் மேற்படிப்பு வழங்க இயலாத நிலை உருவாகிவிட்டது.
குறிப்பாக, அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் சில உயர்தர கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதில் சில குளறுபடிகள் ஏற்படுவதை தவிர்க்கவே நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அதிலும், நேர்மையான முறையில் மருத்துவம், பொறியியல், மேலாண்மை , சட்டம் போன்ற பல்வேறு துறைகளில் மேற்படிப்புக்காக மாணவர்களை தேர்வு செய்யும்போது கண்டிப்பாக நுழைவுத்தேர்வு நடத்த வேண்டிய நிலையில் கல்வி நிறுவனங்கள் உள்ளன.
இதன் மூலம், அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மேற்படிப்பில் சம வாய்ப்பு வழங்கப்பட்டு, உலக தரத்தில் மேற்படிப்புகளை வழங்க முடியும்.
நுழைவு தேர்வு எழுதுவதில் கடும் போட்டி நிலவுவதால், சில மாணவ ,மாணவிகள் தேர்வு எழுதுவதை தவிர்க்கிறார்கள். சில பெற்றோர்கள் இந்த நுழைவுத் தேர்வை எதிர்க்கிறார்கள். “மாணவ மாணவிகளுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு தவறான பாதையில் அவர்கள் திட்டமிட வழிவகுக்கிறது” என்றும் குரல் எழுப்புகிறார்கள்.
ஆனால் அதே நேரத்தில், கல்வித்தரத்தை உயர்த்தி, சிறந்த திறமை மிக்க மனித வளத்தை உருவாக்க நுழைவுத் தேர்வு அடிப்படையாக அமைகிறது என்றும் பலர் கருதுகிறார்கள்.
நுழைவுத் தேர்வுகள்.
இந்தியாவில் மேற்படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படும் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் பற்றிய விவரங்கள்.
• National Eligibility cum Entrance Exam (NEET)
• Joint Entrance Examination (JEE)
• All India Exam for Agriculture
• National Council for Hotel Management Joint Entrance Examination
• Common Law Admission Test
• IISERs BS-MS Admission Exam
• Graduate Aptitude Test in Engineering (GATE)
• National Aptitude Test in Architecture (NATA)
• State Engineering Entrance ExamS.
• CEED (Common Entrance Examination for Design )
• National Institute of Design (NID)
• National Institute of Fashion Technology (NIFT),
• Film and Television Institute of India Entrance Examination
• National School of drama (NSD) Screening Test
• AIMS Test for Management Admission (ATMA)
• Common Admission Test (CAT)
• Joint Management Entrance Test (JMET)
• Management Aptitude Test (MAT)
• National Council for Hotel Management and Catering Technology (NCHMCT) –
• Xavier Admission Test (XAT)
நுழைவுத் தேர்வுகளை வெற்றிகரமாக எழுதுவது எப்படி?
நுழைவுத்தேர்வு என்பது மாணவ மாணவிகளுக்கு ஒரு போட்டி தேர்வாகவே அமைந்து விடுகிறது.
"இந்த தேர்வு எழுதினால் நாம் வெற்றி பெறுவோமா ?"என்கிற சந்தேக கேள்வியையும் அவர்கள் மனதில் எழுப்பும் விதத்தில் சில சூழ்நிலைகளில் அமைந்து விடுகிறது.
இருப்பினும், ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்தோடு நுழைவு தேர்வு எழுதுகிறார்கள். இந்த நுழைவுத் தேர்வில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி? என்கின்ற சில நுணுக்கங்களை பார்ப்போம்.
1. முதலில் நுழைவுத்தேர்வு பற்றிய தெளிவான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்
2. அந்தத் தேர்வுக்கான பாடத்திட்டம் பற்றிய விளக்கங்களை தேர்வு நடத்துபவர்கள் முன்கூட்டியே தெரிவித்து வடுவார்கள். எனவே, அந்தத்தேர்வு பற்றிய பாடத்திட்டங்களை சேகரித்து பள்ளியில் படிக்கும் போதே அந்தப் பாடத்தை தெளிவாக புரிந்து படிக்க ஆரம்பியுங்கள்.
3. தேர்வில் கேள்விகள் எவ்வாறு அமையும் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். கடந்த ஆண்டுகளில் நடந்த தேர்வுகளில் இடம்பெற்ற முக்கிய கேள்விகளை தெரிந்து கொள்ளுங்கள். முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வுகளில் கேள்வித்தாள்களை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
4. கேள்விகள் ,"கொள் குறி வகை வினா அமைப்பில் (OBJECTIVE TYPE QUESTIONS )அமைந்துள்ளதா ?அல்லது விளக்க விடை கேட்கும் கேள்வியாக (DESCRIPTIVE TYPE QUESTIONS) அமைந்துள்ளதா? என்பதையும் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப தயாரிப்பை மேற்கொள்ளுங்கள்.
5. நுழைவுத்தேர்வில் இடம்பெறும் ஒவ்வொரு பாடத்திற்கும் எவ்வளவு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன ? என்பதை கணக்கிட்டு ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் ? என்பதையும் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
6. ஒவ்வொரு கேள்விக்கும் வழங்கப்படும் மதிப்பெண்களில், தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் (NEGATIVE MARKS) எவ்வளவு? என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
7. தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வு என்றால், NCERT வெளியிட்டுள்ள பாட புத்தகங்களை வாங்கி படியுங்கள்
8. நாள்தோறும் படிப்பதற்கு ஒரு கால அட்டவணை ( TIME TABLE) தயார் செய்து கொள்ளுங்கள்.
9. வாரந்தோறும் படிக்க வேண்டிய பாடங்களையும், மாதந்தோறும் படித்து முடிக்க வேண்டிய பாடங்களையும் முன்கூட்டியே திட்டமிட்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
10. படிப்பதற்கு தனியாக சிறந்த இடத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டு படியுங்கள்.
11. படிப்பதற்கு கடினமான பாடங்களை முதலில் தேர்ந்தெடுத்து படியுங்கள். அதன்பின்னர், எளிதான பாடங்களை படிக்க ஆரம்பிக்கலாம்.
12. ஒவ்வொரு பாடத் தலைப்புக்கான வரையறைகளை (DEFENITIONS) தெரிந்து கொள்ளுங்கள். அதேபோல், எல்லா பாடங்களிலுள்ள ஃபார்முலாக்களை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்.
13. “மனப்பாடம் செய்து இந்த நுழைவுத்தேர்வில் வெற்றி பெற முடியும்” என்னும் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். ஏனென்றால், மிகத் தெளிவான தொடர் பயிற்சி சிறப்பான நேரத்திட்டமிடல் , படிப்பதில் தன்னார்வம், அறிவார்ந்த சிந்தனை ஆகியவற்றின் மூலம்தான் நுழைவு தேர்வில் வெற்றி பெற இயலும்.
14. நாள்தோறும் படித்த பாடத்தில் சில கேள்விகளை தேர்ந்தெடுத்து நீங்களே பதில் எழுத பழகிக் கொள்ளுங்கள்.
15. வாரத்தில் மூன்று முறையாவது தொடர்ந்து மாதிரி தேர்வுகள் எழுதும் முறையை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
நுழைவு தேர்வு பயிற்சி தேவையா?
சிலர் பள்ளிகளில் படிக்கும் போதே பள்ளிபாடத்தையும் படித்துக் கொண்டு, நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளிலும் சேர்ந்து கொள்கிறார்கள்.
பள்ளியில் சுமார் எட்டு மணி நேரம் பாடங்களை படித்த பின்பு, மீண்டும் பயிற்சி வகுப்புகள் அல்லது கோச்சிங் கிளாஸ் என்ற பெயரில் சிறப்பு வகுப்புகளில் பங்கு வருகிறார்கள். இதனால், தனியாக உட்கார்ந்து படிப்பதற்கு நேரமில்லை என்பதை சில மாணவ மாணவிகள் உணர்ந்து மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்
சிலருக்கு தனியாக உட்கார்ந்து படிப்பதற்கு வசதி வாய்ப்புகள் இருக்கும். அவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தனியாக படித்தாலே புரிந்து கொள்ளும் திறமை சிலருக்கு இருக்கலாம். அவர்களும் நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு செல்லாமல் நேரடியாக தேர்வு எழுதலாம்.
ஆனால், யாராவது அருகில் இருந்து பயிற்சி அளித்தால் மட்டுமே வெற்றி பெற இயலும் என நினைப்பவர்கள் மட்டும் நுழைவுத்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளில் சேரலாம்.
பள்ளியில் படித்தாலும், பயிற்சி வகுப்பில் படித்தாலும், நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான பயிற்சியை முறையாக கற்றவர்கள் மட்டுமே நுழைவுத் தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறுகிறார்கள்.
நுழைவு தேர்வு பயிற்சி வகுப்புகள் தேவையா? என்பதை ஒவ்வொருவரும் தங்களுடைய குடும்பச் சூழல்கள், குடும்ப நிதி நிலைமை, தங்கள் திறமையின் அளவு, மனப்பான்மை ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானித்துக் கொள்வது நல்லது.
இனி-மேற்படிப்புக்காக நடத்தப்படும் இந்த நுழைவு தேர்வுகள் பற்றிய விரிவான விளக்கங்களை தொடர்ந்து பார்ப்போம்.
முதலில் -எம்.பி.பி.எஸ் (M.B.B.S) எனப்படும் "பேச்சுலர் ஆஃப் மெடிசன், பேச்சுலர் ஆஃப் சர்ஜரி"(BACHELOR OF MEDICINE, BACHELOR OF SURGERY) என்னும் மருத்துவ படிப்பில் சேர விரும்புவர்களுக்காக நடத்தப்படும் நுழைவு நுழைவுத் தேர்வான நீட் (NEET) என்னும் நுழைவு தேர்வு பற்றிய விளக்கத்தை அடுத்த வாரம் விரிவாக பார்ப்போம்
விளக்கம் தொடரும்.