

புதுடெல்லி,
இந்திய வனத்துறை அதிகாரி (ஐஎப்எஸ்) பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் (யுபிஎஸ்சி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு:
பணியிடங்கள்: வனத்துறை அதிகாரி ஐ.எப்.எஸ். பிரிவில் 80 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித்தகுதி: வேளாண்மை, வனம், கால்நடை, தாவரவியல், வேதியியல், கண இயற்பியல், புள்ளியியல், விலங்கியல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரில் பிரிவில் பட்டப்படிப்பு அவசியம்.
வயது வரம்பு: 1.7.2026 தேதிப்படி 21 வயது முதல் 32 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வுமுறை: முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு
தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலுார்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக் கட்டணம்: ரூ 100 - பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க வரும் 24.02.2026 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://upsc.gov.in/sites/default/files/Notif-IFSP-26-Engl-040226.pdf