

இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் போர் பிரிவு அல்லாத (Non-Combatant) பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி த்தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
தேர்வு முறை: அக்னிபாத் திட்டம்
பணி காலம்: 4 ஆண்டுகள் (தற்காலிகமானது)
கல்வி தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் 12-ம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ
வயது: விண்ணப்பதாரர்கள் 02.07.2005 முதல் 02.01.2009 -க்கு இடைப்பட்ட காலத்திற்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது அதிகபட்ச வயது வரம்பு 21 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம்: அக்னி பாத் திட்டம் மூலம் பணிக்கு அமர்த்தப்படும் வீரர்கள் 4 வருடம் மட்டுமே பணியில் இருக்க வேண்டும். இவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்.. 4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25 சதவிகிதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர்க்கப்படுவார்கள்.
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.02.2026 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://agniveernavy.cdac.in/