பொதுத்துறை வங்கியில் வேலை: 350 காலிப்பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மொத்தம் 350 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Image Credits: AI
Image Credits: AI
Published on

நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்று சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த வங்கியின் நாடு முழுவதும் உள்ளன. இந்த வங்கியில் காலியாக பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:

பணி நிறுவனம்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா

காலி இடங்கள்: 350

பதவி பெயர்: மார்க்கெட்டிங் ஆபீசர் (நிலை 1) மற்றும் பாரின் எக்ஸ்சேஞ்ச் ஆபீசர் (நிலை Ill)

கல்வி தகுதி: பட்டப்படிப்பு, எம்.பி.ஏ., பி.ஜி.டி.பி.ஏ./பி.ஜி.டி.பி.எம்./பி.ஜி.பி.எம்./பி.ஜி.டி.எம். பணி அனுபவமும் கொண்டிருக்க வேண்டும்.

வயது: 1-1-2026 அன்றைய தேதிப்படி பாரின் எக்ஸ்சேஞ்ச் ஆபீசர் பதவிக்கு 25 முதல் 35 வயது வரையும், மார்க்கெட்டிங் ஆபீசர் பதவிக்கு 22 முதல் 30 வயது வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்து தேர்வு, நேர்காணல்

தேர்வு மையம் (தமிழ்நாடு): சென்னை, மதுரை, திருச்சி, கோவை, வேலூர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-2-2026

விண்ணப்பிப்பது எப்படி: https://www.centralbankofindia.co.in/en/recruitments

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com