நீலகிரியில் உள்ள மத்திய அரசு தொழிற்சாலையில் வேலை..50 காலிப்பணியிடங்கள்

பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் இந்த தொழிற்சாலையில் மொத்தம் 50 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
நீலகிரியில் உள்ள மத்திய அரசு தொழிற்சாலையில் வேலை..50 காலிப்பணியிடங்கள்
Published on

தமிழகத்தில், நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் (Cordite Factory) ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் இந்த தொழிற்சாலையில் மொத்தம் 50 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இது பற்றிய விவரங்கள் வருமாறு;

காலியிடங்கள்: மொத்தம் 50

கல்வித்தகுதி: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு: 18 முதல் 40 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 19,900

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ டிரேடு படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் செய்முறைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://cordite.co.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை நகல்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The General Manager, Cordite Factory, Aruvankadu, The Nilgiris District. Tamilnadu Pin - 643 202.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.02.2026.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com