

பணியிடங்கள்: ஐ.டி.ஐ., பிரிவில் 1136, ஐ.டி.ஐ., இல்லாதவை 2843 என மொத்தம் 3979 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு
வயது: 18-வயது முதல் 35 வயதுக்குள்
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்புசென்னை,
யந்திரா இந்தியா லிமிடெட் (Yantra India) என்பது மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்திய பாதுகாப்பு படை பிரிவுக்கு தேவையான இயந்திரங்கள், ராணுவ பீரங்கிகள் உள்ளிட்டவை இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:
சம்பளம் எவ்வளவு? ஐடிடி பிரிவு பணிகளுக்கு மாதம் ரூ.8,200 சம்பளம் வழங்கப்படும். ஐடிஐ அல்லாத பிரிவு பணிகளுக்கு மாதம் ரூ.9,600 சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100.
விண்ணபிக்க கடைசி தேதி: 03.03.2026 ஆகும்.