

சென்னை,
தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
ஓமன் நாட்டில் பணிபுரிய Production (Exposure in Melting/ Moulding/ Process Control) மற்றும் Finishing & Inspection (Exposure in Quality/ Final Inspection) விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
ஓமன் நாட்டில் பணிபுரிய Diploma (background) or ITI (background) தேர்ச்சி பெற்ற இரண்டு வருட பணி அனுபவத்துடன் கூடிய 22 முதல் 35 வயதிற்கு உட்பட்ட Production (Exposure in Melting/ Moulding/ Process Control) மற்றும் Finishing & Inspection (Exposure in Quality/ Final Inspection) பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இப்பணிக்கு மாத வருமானம் குறைந்தபட்சம் ரூ. 41,000/- முதல் ரூ.51,000/ வரை ஊதியமாக வழங்கப்படும்.
மேலும் உணவு, விசா, இருப்பிடம் மற்றும் விமான பயணச்சீட்டு ஆகியவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ.35,400/- மட்டும் செலுத்தினால் போதுமானது.
மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவரம் அடங்கிய விண்ணப்படிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட் நகல் மற்றும் புகைப்படம் (Resume, Qualification, Experience Certificate, Passport Copy & Photo ஆகியவற்றை 28.2.2026-குள் அனுப்பவும்.
கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையத்தளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267) & வாட்ஸ்ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.