என்.எல்.சி நிறுவனத்தில் வேலை: 21 காலிப்பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசு நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனத்தில் 21 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
என்.எல்.சி நிறுவனத்தில் வேலை: 21 காலிப்பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள மத்திய அரசு நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனத்தில் 21 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணபிக்கலாம்.

கல்வித்தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்கள் வருமாறு:

பணியிடங்கள்: பார்மாசிஸ்ட் 15, தியேட்டர் அசிஸ்டண்ட் 2, ஸ்பீச் தெரபிஸ்ட் 1, டெண்டல் மெக்கானி-1, கண் மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்- 2 என மொத்தம் 21 பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ, பிஎஸ்சி, பா பார்ம் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

முழு விவரங்களை கீழே உள்ள தேர்வு அறிவிப்பில் பார்க்கலாம்.

வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: எழுத்து தேர்வு, மருத்துவ சோதனை அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதியுள்ள விண்னப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.486 கட்டணம் ஆகும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.256.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.03.2026

முழு விவரங்களுக்கு: https://www.nlcindia.in/website/en/

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com