ரிசர்வ் வங்கியில் வேலை: 650 காலியிடங்கள்- டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிங்க

சென்னையில் மட்டும் 53 காலியிடங்கள் உள்ளன.
ரிசர்வ் வங்கியில் வேலை:  650 காலியிடங்கள்- டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிங்க
Published on

நாட்டின் மத்திய வங்கியாக உள்ள ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பதவியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://opportunities.rbi.org.in/ என்ற இணையதளத்தில் மார்ச் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:

பணியிடங்கள்: ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர் பணியிடங்கள், சென்னையில் மட்டும் 53 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி

வயது வரம்பு: 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது விண்ணப்பதாரர்கள் 02/02/1998 க்கு முன்பாகவோ, 01/02/2006- க்கு பிறகோ பிறந்தவராக இருக்கக் கூடாது.

சம்பளம் எவ்வளவு: மாதம் ரூ.58,514 வழங்கப்படும்

தேர்வு முறை; முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு உள்ளூர் மொழித்திறன் தேர்வு என மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும்.

தேர்வு மையங்கள்: முதல்நிலைத் தேர்வு: சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு, விருதுநகர், நாகர்கோவில்/ கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சாவூர் & புதுச்சேரி முதன்மைத் தேர்வு: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர், சேலம், புதுச்சேரி

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.03.2026

தேர்வு அறிவிப்பை படிக்க: https://opportunities.rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=4912

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com