2,708 உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு முடிவு.. விரைவில் வெளியாக வாய்ப்பு

தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.
2,708 உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு முடிவு.. விரைவில் வெளியாக வாய்ப்பு
Published on

சென்னை,

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 708 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டது.

அதன்படி, இந்த பணியிடங்களுக்கான தேர்வை எழுத சுமார் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 42 ஆயிரத்து 64 பேர் தேர்வை எழுதி இருந்தார்கள்.

இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள் கடந்த மாதம் (ஜனவரி) வெளியான நிலையில், தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? என தேர்வர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். அதன்படி, தேர்வு முடிவு விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com