தமிழ்நாடு காவல்துறை பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு எப்போது? ஆண்டுகால அட்டவணை வெளியீடு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆண்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறை பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு எப்போது? ஆண்டுகால அட்டவணை வெளியீடு
Published on

சென்னை,

அரசு பணிகளுக்கு தேர்வு ஆகும் தேர்வர்கள், தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையில் ஆண்டுகால அட்டவணை வெளியிடப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி போன்ற தேர்வு வாரியங்கள் ஆண்டு கால அட்டவணையை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியமும் ஆண்டு அட்டவணை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2026-ம் ஆண்டில் தொழில்நுட்ப பிரிவு சார்பு ஆய்வாளர் (SI), பேண்ட் போலீஸ் கான்ஸ்டபிள் (Band Police Constable), பொது ஆட்சேர்ப்பு தேர்வு, இணை ஆட்சேர்ப்பு தேர்வு ஆகியவை நடத்தப்படவுள்ளது.

ஆண்டு திட்ட அட்டவணையில் இத்தேர்வுகளுக்கு எப்போது அறிவிப்பு வெளியாகும் என மட்டுமே இடம்பெற்றுள்ளது. அத்தேர்வுகளில் நிரப்பப்படும் காலிப்பணியிடங்கள் குறித்த தகவல் இல்லை. அதாவது, சார்பு ஆய்வாளர் டெக்னிக்கல் பணியிடங்களுக்கான அறிவிப்பு மே மாதமும், பேண்ட் கான்ஸ்டபிள் பணிக்கான அறிவிப்பு ஜுலை 26ம்,, பொது ஆட்சேர்ப்பு அறிவிப்பு செப்டம்பர், இணை ஆட்சேர்ப்பு அறிவிப்பு நவம்பர் மாதமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தாண்டு காவல்துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது என்ற விவரங்கள் இல்லை.அதே போன்று, தேர்வு எப்போது என்ற அறிவிப்பும் அட்டவனையில் இடம்பெறவில்லை. அந்தந்த தேர்வு அறிவிப்பு வெளியாகும்போது, காலிப்பணியிடங்கள் மற்றும் தேர்வு தேதி குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com