வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
Published on

மதுரை,

மதுரை செல்லூரைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 29). இவர் கடந்த 2017-ம் ஆண்டு சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அதன்பேரில் செல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அஜித்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் ஜான்சிராணி ஆஜரானார். முடிவில், அஜித்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்ட னையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ராதிகா நேற்று தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com