

தோகைமலை,
கபடி போட்டி
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள வடசேரி ஊராட்சி கார்ணாம்பட்டியில் 67-வது ஆண்டாக மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. போட்டி 3 நாட்கள் தொடர்ந்து பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டன..
இதில் திருச்சி, கரூர், நாகப்பட்டினம், சேலம், ஈரோடு, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 62 அணிகள் கலந்து கொண்டு விளையாடி தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
பரிசு
இதில் முதல் பரிசு ரூ.25,001 மற்றும் குளிர்சாதன பெட்டி, சுழற்கோப்பையை கரூர் மாவட்டம் குளக்காரன்பட்டி பாரதி இளைஞர் நற்பணி மன்ற கபடி குழுவும், 2-வது பரிசு ரூ.20,001 மற்றும் எல்.இடி. டிவி., சுழற்கோப்பையை கார்ணாம்பட்டி வ.உ.சி. நினைவு கபடி குழுவும் 3-வது பரிசு ரூ.15,001 மற்றும் சைக்கிள், சுழற்கோப்பையை நாகப்பட்டினம் மாவட்டம் ஏனங்குடி ஜிகச்எஸ்எஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் கபடி குழுவும், 4-வது பரிசு ரூ.10,001 மற்றும் கட்டில், கோப்பையை குளித்தலை குட்டபட்டி குட்லக் கபடி குழுவும் பெற்றன.
தொடர்ந்து காலிறுதியில் தோல்வியுற்ற அணிகளுக்கும், சிறந்த ஆட்டக்காரர், சிறந்த கேச்சர் ஆகியோருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து அணிகளுக்கும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. போட்டியை ஏராளமான பொதுமக்கள், கபடி ரசிகர்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை வ.உ.சி.கபடி குழு, நேரு இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.