புனே,
புனே தனோரி பகுதியை சேர்ந்த பெண் கவிதா (வயது 28). இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இந்த நிலையில், அவரது கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கவிதாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இது தொடர்பாக கவிதாவுக்கும், அவரது கணவர் குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் கவிதாவை கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து கவிதாவின் மைத்துனர் சோனு ஆஞ்சநேயா (24) மற்றும் 3 பெண்களை கைது செய்தனர். சம்பவத்தின் போது கவிதாவின் கணவர் வீட்டில் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.
வரதட்சணைக்காக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தனோரி பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.