திருமங்கலம் பகுதியில், மது விற்ற பெண்கள் உள்பட 10 பேர் சிக்கினர்

திருமங்கலம் பகுதியில் மது விற்ற பெண்கள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருமங்கலம் பகுதியில், மது விற்ற பெண்கள் உள்பட 10 பேர் சிக்கினர்
Published on

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே உள்ள அம்மாபட்டியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த ஜெயமணி (வயது 25) என்பவர் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர். இதேபோல் புல்லமுத்தூரை சேர்ந்த பிரசாந்த்(26), சித்தாலையை சேர்ந்த கோடீஸ்வரன்(57) மற்றும் சுந்தரராஜன் ஆகியோர் மதுபாட்டில்கள் விற்றதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கள்ளிக்குடி அருகே சென்னம்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதே ஊரை சேர்ந்த பொன்னழகு(33) மற்றும் திருமுடி(33) ஆகிய 2 பெண்கள் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கள்ளிக்குடி போலீர் கைது செய்தனர்.

இதேபோன்று சிந்துபட்டி அருகே கீழச்செம்பட்டியை சேர்ந்த முத்துராமன்(27), வாகைக்குளத்தை சேர்ந்த அறிவழகன் ஆகிய 2 பேரும் மது விற்றதாக சிந்துபட்டி போலீசார் கைது செய்தனர். முனியாண்டிபுரம் கிராமத்தில் கூடக்கோவில் போலீசார் ரோந்து சென்றிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன், வல்லவராணி ஆகியோர் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆக மொத்தம் திருமங்கலம் பகுதியில் மது விற்றதாக 3 பெண்கள் உள்பட 10 பேர் மதுவிற்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com