

ஆவடி,
சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர், எத்தியோப்பியா நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். தற்போது விடுமுறையில் சென்னை வந்துள்ளார். இவருடைய மகள் அனஸ்ரீதா (வயது 15). இவர், முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு அனஸ்ரீதா, சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு சென்றார். நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அறைக்கு சென்றனர்.
தூக்கில் பிணம்....
அறையின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. உடனே அவர்கள் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அனஸ்ரீதா, தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த கொரட்டூர் போலீசார், தற்கொலை செய்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி அனஸ்ரீதா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.