

பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமானவர்கள் உயிரிழந்து வருகிறார்கள். கர்நாடகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இதுவரை 150 பேர் இறந்துள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
சாம்ராஜ்நகர், பெங்களூரு, கலபுரகி, பல்லாரி, துமகூரு, கோலார், பாகல்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் நடந்துள்ளன.
இவ்வளவு சம்பவம் நடந்த பிறகும் ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அரசு கவனம் செலுத்தாமல் இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.
எனக்கு கிடைத்த தகவலின்படி கடந்த 5-ந் தேதி 80 டன் ஆக்சிஜனும் இன்று (நேற்று) 250 டன் ஆக்சிஜனும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.
ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகள் ஆபத்தான கட்டத்தை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. நிலைமை இன்னும் மோசம் அடைவதற்குள் ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அதில் எச்.கே.பட்டீல் தெரிவித்துள்ளார்.