

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 43 வயதுடய ஆண் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இவர் கடந்த 3-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தாற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் 4-ந் தேதி இறந்தார்.
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 50 வயது ஆண். காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சு திணறல் காரணமாக கடந்த 26-ந் தேதி சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தாற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்ததும் பலன் அளிக்காமல் கடந்த 5-ந் தேதி அவர் இறந்தார். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது.
500 பேருக்கு தொற்று
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 491 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று வரையில் 17 ஆயிரத்து 434 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 14 ஆயிரத்து 843 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 451 பேர் சிகிச்சையில் உள்ளனர்.