ஒரே குடும்பத்தை சேர்ந்த 25 பேர் தர்ணா

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 25 பேர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 25 பேர் தர்ணா
Published on

திண்டுக்கல்:

25 பேர் தர்ணா

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா வேம்பரளியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). விவசாயி. இவர் நேற்று தனது சகோதர, சகோதரிகள் மற்றும் குடும்பத்தினர் என 25 பேருடன் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் தங்களுடைய பூர்வீக விவசாய நிலத்தை மீட்டு தரும்படி வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் விரைந்து சென்று, தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தர்ணாவில் ஈடுபட்டவர்கள் ஒரு பையில் மறைத்து கொண்டு வந்த மண்எண்ணெய் கேனை வெளியே எடுத்தனர். அதை பார்த்த போலீசார் துரிதமாக செயல்பட்டு மண்எண்ணெய் கேனை பறித்தனர். மேலும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்கள் தர்ணாவை கைவிட்டனர்.

விவசாய நிலம் ஆக்கிரமிப்பு

பின்னர் போலீசாரிடம் அவர்கள் கூறுகையில், எங்களுடைய பூர்வீக விவசாய நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். அந்த நிலத்தை மீட்டு தரும்படி பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களுடைய நிலத்தை மீட்டு தரவேண்டும் என்று கூறினர். இதை தொடர்ந்து அவர்களுக்கு போலீசார் அ றிவுரை கூறி, அதிகாரிகளிடம் மனு கொடுக்கும்படி அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 25 பேர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com