தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்–1 பொதுத்தேர்வை 29,585 மாணவ, மாணவிகள் எழுதினர்

தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்–1 பொதுத்தேர்வை 29 ஆயிரத்து 585 மாணவ, மாணவிகள் எழுதினர்.
தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்–1 பொதுத்தேர்வை 29,585 மாணவ, மாணவிகள் எழுதினர்
Published on

தஞ்சாவூர்,


தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் பிளஸ்1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படி நேற்று பிளஸ்1 வகுப்புக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.

இந்த பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 16ந்தேதி வரை நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் இந்த தேர்வை 217 பள்ளிகளை சேர்ந்த 29 ஆயிரத்து 585 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 13 ஆயிரத்து 150 மாணவர்களும், 16 ஆயிரத்து 435 மாணவிகளும் அடங்குவர். இவர்கள் 95 மையங்களில் தேர்வு எழுதினர்.


தேர்வு எழுதுவதை கண்காணிக்க 88 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன. தேர்வு மையங்களுக்கு பறக்கும்படை அதிகாரிகள் நேரில் சென்று கண்காணித்தனர். தேர்வு நடைபெற்றதையொட்டி தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com