

காஞ்சீபுரம்,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின், 2-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி காஞ்சீபுரம் நகரின் முக்கிய சாலையான காந்திரோட்டில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு அதில் ஜெயலலிதாவின் படம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த படத்துக்கு காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் வீ.வள்ளிநாயகம் மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ண மூர்த்தி உள்பட பலர் மாலைகள் அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் பொதுமக்களுக்கு அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது. மேலும் காஞ்சீபுரத்தில் பல்வேறு இடங்களிலும் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி, ஜெயலலிதா படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த சிங்க பெருமாள் கோவில் மண்டபத்தெருவில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கவுஸ்பாஷா தலைமை தாங்கினார். ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் சந்தானகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர் வடகால் மாரி, ஒன்றிய பொருளாளர் பலராமன் முன்னிலை வகித்தனர்.
அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கவுஸ்பாஷா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து ஆலப்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சல்குரு. மறைமலை நகர் முன்னாள் நகரமன்ற தலைவர் கோபிகண்ணன். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் செட்டிபுண்ணியம் குணசேகரன், வீராபுரம் சரவணன், சிங்கபெருமாள் கோவில் ரவிச்சந்திரன், வெங்கிடாபுரம் மோகன்ராஜ், புலிப்பாக்கம் ரவி, கிளை செயலாளர்கள் எழிலரசு, ரவி, விஜயபாஸ்கர், கண்ணன், வல்லம் அருள்தாசன், ஆலப்பாக்கம் உமாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஜெயலலிதா படம் அடங்கிய பதாகைகளுடன் முக்கிய வீதிகள் வழியாக மவுன ஊர்வலம் நடைபெற்றது.
இதுபோல சிங்கபெருமாள் கோவில் ஊராட்சிக்கு உள்பட்ட திருத்தேரியில் கிளை செயலாளர் ராஜேந்திரன். பாரேரியில் ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் ரவி ஆகியோர் தலைமையில் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் உலகநாதன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் அ.தி.மு.க. நிவாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர் .ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய செயலாளர் எறையூர் முனுசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர். கீவளுர் ஊராட்சியில் கிளை செயலாளர் கோவிந்தன், ஒன்றிய மாணவரணி செயலாளர் முருகன் தலைமையில் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் ஏழை,எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செங்காடு கிராமத்தில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாபு அஞ்சலி செலுத்தினார். சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் விவசாய அணி ஒன்றிய செயலாளர் சிங்கிலிபாடி ராமசந்திரன் தலைமையில் முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன், சந்தவேலூர் கிளை செயலாளர் சரவணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.