பெண் போலீஸ் உள்பட 2 பெண்களிடம் சங்கிலி பறித்த 3 பேர் கைது

பெண் போலீஸ் உள்பட 2 பெண்களிடம் சங்கிலி பறித்த 3 பேர் கைது.
பெண் போலீஸ் உள்பட 2 பெண்களிடம் சங்கிலி பறித்த 3 பேர் கைது
Published on

சென்னை,

சென்னை சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணியாற்றுபவர் கவிதா (வயது 31). இவர், கடந்த ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி இரவு எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் பாதுகாப்பு பணிக்காக தன்னுடன் வேலை பார்க்கும் போலீஸ்காரர் விஜயகுமாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். திருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் சென்றபோது, இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பெண் போலீஸ் கவிதா கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் எடையுள்ள 2 தங்க சங்கிலிகளை பறித்து சென்றனர்.

அதேபோல் திருவல்லிக்கேணி பல்லவன் சாலையிலும் சரஸ்வதி என்ற அரசு பெண் ஊழியரிடம் இதுபோல் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் 4 பவுன் தங்க சங்கிலியையும், அண்ணாசாலை தர்கா அருகே நடந்து சென்ற சாந்தி என்ற பெண்ணிடமும் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக தனிப்படை போலீசார் பட்டாபிராமைச்சேர்ந்த கிருபா (19), ஆவடியை சேர்ந்த பால்சிவா (20) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 16 பவுன் தங்க நகை மற்றும் 6 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com