

ஈரோடு,
இதேபோல் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள குன்றி, கூத்தம்பாளையம் ஊராட்சியிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கும் அதிகாரிகள் வரவில்லை. இதைத்தொடர்ந்து குன்றியில் நடந்த கூட்டத்தில், குன்றி கிராமத்துக்கு 3 முறை அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கூத்தம்பாளையத்தில் நடந்த கூட்டத்தில், குரும்பூர் பிரிவு முதல் மாக்கம்பாளையம் வரை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.