

ஈரோடு,
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசியதாக கூறி பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனை கண்டித்து பவானியில் அந்தியூர் பிரிவு சாலையில் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு த.மு.மு.க. நகர செயலாளர் சிராஜ்தீன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நகர செயலாளர் யாசின், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் சலீம்ராஜா, மனிதநேய மக்கள் கட்சி பொறுப்பாளர் அன்சாரி, மாவட்ட மருத்துவர் அணி பொறுப்பாளர் முஜிபூர் ரகுமான், த.மு.மு.க. மாவட்ட பொறுப்பாளர் முகமது, ஊடகப்பிரிவு செயலாளர் நிஜாமுதீன் உள்பட 47 பேர் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பவானி போலீசார் 47 பேரையும் கைது செய்தனர். பின்னர் அனைவரும் அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.