மயிலாடுதுறை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிவந்த 5 பேர் கைது - 2 டிராக்டர்கள் பறிமுதல்

மயிலாடுதுறை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிவந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மயிலாடுதுறை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிவந்த 5 பேர் கைது - 2 டிராக்டர்கள் பறிமுதல்
Published on

குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிவந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே பெருஞ்சேரி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி மணல் எடுக்கப்படுவதாக பெரம்பூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம் மற்றும் போலீசார் மேற்கண்ட இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 டிராக்டர்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மணல் அள்ளிவந்தது தெரியவந்தது. உடனே போலீசார், 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர்கள் கிளியனூர் அகரவல்லம் கீழத்தெருவை சேர்ந்த அழகேசன் (வயது 36), நெய்குப்பை தோப்பு தெருவை சேர்ந்த மதியழகன் (58), டிராக்டர் கிளனர்கள் கிளியனூர் அகரவல்லம் கீழத்தெருவை சேர்ந்த கணேஷ் மகன் ரமணன் (19), ஆறுமுகம் மகன் அய்யப்பன் (19), மணல் எடுக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளர் அகரவல்லம் ரைஸ்மில் தெருவை சேர்ந்த சின்னப்பா மகன் மணிகண்டன் (30) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com