5 மாடி கட்டிடம் தரைமட்டமானது எப்படி? மயிரிழையில் உயிர் தப்பியவர் உருக்கம்

5 மாடி கட்டிடம் தரைமட்டமானது குறித்து மயிரிழையில் உயிர் தப்பியவர் உருக்கமாக கூறினார்.
5 மாடி கட்டிடம் தரைமட்டமானது எப்படி? மயிரிழையில் உயிர் தப்பியவர் உருக்கம்
Published on

மும்பை,

ராய்காட் மாவட்டம் மகாடில் இடிந்து தரைமட்டமான 5 மாடி கட்டிடம் கட்டப்பட்டு 10 ஆண்டுகளே ஆனதாக கூறப்படுகிறது. இந்த கட்டிடம் இடிந்து விழுந்தபோது மயிரிழையில் உயிர் தப்பியவர் முஸ்தபா. இவர் கட்டிடத்தை விட்டு வெளியே வந்த சில வினாடிகளில் அவர் கண்முன்னே அது தரைமட்டமாகி விட்டது. இது குறித்து அவர் கூறியதாவது:-

நான் வீட்டில் இருந்த போது திடீரென கட்டிடம் ஆடியது. உடனே பால்கனிக்கு சென்று பார்த்தேன். அப்போது கீழே நின்ற சிலர் கட்டிடம் இடியப்போகிறது ஓடி வாருங்கள் என்றனர்.

உடனே நான் குடும்பத்தினரை அழைத்து கொண்டு வெளியே ஓடினேன். அப்போது பக்கத்து வீட்டுக்காரர்களை உஷார்படுத்திவிட்டு வந்தேன். நாங்கள் வெளியே வந்தவுடன் பயங்கர சத்தம் கேட்டது. நான் திரும்பி பார்த்த போது, தரை தளத்தில் இருந்த 2 ராட்சத தூண்கள் துண்டுகளாக நொறுங்கின. கட்டிட பணிகள் தரமற்ற முறையில் நடந்ததே விபத்துக்கு காரணம். இதுகுறித்து ஏற்கனவே கட்டிட ஒப்பந்ததாரரிடம் புகார் அளித்தோம். ஆனால் அவர் வீடு உங்களிடம் விற்கப்பட்டு விட்டது. இனிமேல் அது உங்கள் பாடு என கூறிவிட்டார்.

உயிர் தப்பிய நான் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. மேலும் நாங்கள் தினந்தோறும் பேசி பழகிய பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி கிடப்பதை பார்க்கும்போது மனது வேதனையில் துடிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com