புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 50 படுக்கைகள் தயார்; நெல்லை அரசு ஆஸ்பத்திரி டீன் ரவிச்சந்திரன் தகவல்

புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 50 படுக்கைகள் தயார் நிலையில் வக்கப்பட்டுள்ளதாக டீன் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
நெல்லை அரசு ஆஸ்பத்திரி டீன் ரவிச்சந்திரன்
நெல்லை அரசு ஆஸ்பத்திரி டீன் ரவிச்சந்திரன்
Published on

புதிய வகை கொரோனா வைரஸ்

கொரோனா தொற்று உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் நிலையில், வீரியமுடன் பரவும் புதிய வகை கொரோனா இங்கிலாந்து நாட்டில் கண்டறியப்பட்டது. தொடர்ந்து கொரோனா இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பரவ தொடங்கியது.

இதையடுத்து இங்கிலாந்து நாட்டில் இருந்து திரும்பியவர்களின் விவரம் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்து நாட்டில் இருந்து திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்துக்கு சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்த 34 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு காரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. எனினும் அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் புதிய வகை கொரானாவால் யாரும் பாதிக்கப்படவில்லை. எனினும் மாவட்ட நிர்வாகம் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

இதுகுறித்து நெல்லை அரசு ஆஸ்பத்திரி டீன் ரவிச்சந்திரன் கூறியதாவது:-

50 படுக்கைகள் தயார்

கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்தபோது, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சுமார் 300 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்து விட்டது. நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் குறைந்த அளவிலான கொரோனா நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் புதிய வகையான கொரோனா வைரசால் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை. எனினும் அத்தகைய நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 50 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com