வண்டலூர் தாலுகாவில் 55 நாட்களுக்கு பிறகு சலூன் கடைகள் திறப்பு

வண்டலூர் தாலுகாவில் 55 நாட்களுக்கு பிறகு சலூன் கடைகள் திறக்கப்பட்டது.
வண்டலூர் தாலுகாவில் 55 நாட்களுக்கு பிறகு சலூன் கடைகள் திறப்பு
Published on

வண்டலூர்,

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சலூன் கடைகள் தொடர்ந்து 55 நாட்களாக மூடப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சவரத்தொழிலாளர் சங்கங்கள், அமைப்புகள் தொடர்ந்து சலூன் கடைகள் மூடப்பட்டு இருந்ததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடுவதால் சலூன் கடைகளை திறக்க அனுமதி தர வேண்டும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை வைத்து வந்தன.

தற்போது 4-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும்போது சில தளர்வுகளை தமிழக அரசு செய்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம பகுதியில் உள்ள சலூன் கடைகளை மட்டும் திறக்கலாம் என்று தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார்.

இதனால் 55 நாட்களுக்கு பிறகு செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகாவில் உள்ள மண்ணிவாக்கம், வண்டலூர், ஊரப்பாக்கம், காரணைப்புதுச்சேரி, காயரம்பேடு, மூலக்கழனி, கன்னிவாக்கம், கொளப்பாக்கம், கீரப்பாக்கம், கண்டிகை, மாம்பாக்கம், மேலக்கோட்டையூர், நெடுங்குன்றம், வேங்கடமங்கலம், ரத்தினமங்கலம், பெருமாட்டுநல்லூர் போன்ற வண்டலூர் தாலுகாவில் உள்ள கிராம பகுதிகளில் அனைத்து சலூன் கடைகள் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com